திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் பலி


திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் பலி
x

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பாக்கியம் நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 70). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூருக்கு சென்று காய்கறி வாங்கிக் கொண்டு மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அவர் திருவள்ளூர் காக்களூர் பாலாஜி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் கோவிந்தராஜன் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story