திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி


திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
x

திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினார்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதில் திருவள்ளூர், ஈக்காடு, புல்லரம்பாக்கம், திருப்பாச்சூர், கனகம்மாசத்திரம், வேப்பம்பட்டு, அரண்வாயல், மணவாளநகர், ஊத்துக்கோட்டை, ஒண்டிக்குப்பம், செவ்வாப்பேட்டை, பெருமாள் பட்டு, திருமழிசை, கடம்பத்தூர், பேரம்பாக்கம், சத்தரை, மப்பேடு என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினார்கள். வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர். மேலும் ரெயில்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மேதுவாக சென்றதை காண முடிந்தது. இதனால் திருவள்ளூர் மார்க்கமாக வரும் அனைத்து விரைவு ரெயில்களும் காலதாமதமாக வருவதாகவும் ரயில்வே துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.


Next Story