கிளாம்பாக்கம் பஸ்நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி


கிளாம்பாக்கம் பஸ்நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி
x

கிளாம்பாக்கம் பஸ்நிலையம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் முதல் கனமழை விட்டுவிட்டு பெய்தது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக கிளாம்பாக்கத்தில் புதியதாக கட்டப்படும் பஸ் நிலையத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விட 2 அடி உயரமாக உள்ளதால் மழைநீர் சாலையில் தேங்கியது இதனால் சென்னையில் இருந்து வண்டலூர் வழியாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பெருங்களத்தூர் முதல் பரனூர் வரை 8 வழி சாலை பணி நடைபெற்று வருவதால் சாலையில் ஓரம் எங்கே பள்ளம் இருக்கிறது என தெரியாமல் அனைத்து வாகனங்களும் வலது புறமாக ஆமை வேகத்தில் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story