சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி


சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
x

சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், கொளத்தூர் பஸ் நிறுத்தம் முதல் மருக்காளன் குறிச்சி வரை செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் மழைநீர் ஆங்காங்கே நிற்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும், இந்த சாலை உடையார் பாளையம் மற்றும் ஆண்டிமடம் ஆகிய இரு வட்டங்களின் எல்லை பகுதியாக உள்ளதால் எல்லை பிரச்சினை காரணமாக அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story