சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் முக்குள தீர்த்தவாரி


சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் முக்குள தீர்த்தவாரி
x

மாசி மாத பிறப்பையொட்டி சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் முக்குள தீர்த்தவாரி நடந்தது.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3 குளங்கள் உள்ளன. இவை சூரிய, சந்திர மற்றும் அக்னி ஆகிய பெயர்களில் அமைந்துள்ளது. இவற்றில் புனித நீராடினால் புத்திர பேறு நிச்சயம் என புராண வரலாறுகள் கூறுகின்றன. நேற்று மாசி மாத பிறப்பையொட்டி அஸ்திர தேவருக்கு 3 குளங்களில் தீர்த்த வாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சாமி தாிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் அர்ச்சகர் ராமநாத சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story