பல கோடி ரூபாய் மோசடி புகார்: 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண் கைது


பல கோடி ரூபாய் மோசடி புகார்:  5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண் கைது
x

பல கோடி ரூபாய் மோசடி செய்து 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து பெண் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதுரை


பல கோடி ரூபாய் மோசடி செய்து 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து பெண் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொழில் முதலீடு

மதுரை அரசரடி பென்னர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது53). அதே பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை திருநின்றவூர், கோமதிபுரம் பகுதியை சேர்ந்த சாலமன் மனைவி சோபியா என்ற கோமதி (35) என்பவர் வசித்து வந்தார். அப்போது அவர்தான் தூத்துக்குடியில் மீன் ஏலத்தில் எடுக்கும் தொழில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதித்து வருவதாக சிவக்குமாரிடம் கூறியுள்ளார்.

அதை நம்பி சிவக்குமார் உள்ளிட்ட பலர் அவரிடம் கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்துள்ளனர். பணத்தை பெற்று கொண்டு சோபியா அனைவரையும் ஏமாற்றி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சோபியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைமறைவு

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சோபியா கோர்ட்டில் ஆஜராகாமல் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, மதுரை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டு உத்தரவிடப்பட்டது.

அதை தொடர்ந்து மதுரை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, ராமசாமி, ஏட்டு விவேக் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு சோபியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புகார் அளிக்கலாம்

மேலும் இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யாரேனும் புகார் அளிக்காமல் இருந்தால் தங்களிடம் உள்ள ஆதாரங்களுடன் மதுரை மாவட்ட சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story