ஆரப்பாளையம் அருகே வைகை ஆற்றில் வாலிபர் கொலை- போலீசார் விசாரணை


ஆரப்பாளையம் அருகே வைகை ஆற்றில் வாலிபர் கொலை- போலீசார் விசாரணை
x

மதுரை ஆரப்பாளையம் அருகே வைகை ஆற்றில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை


மதுரை ஆரப்பாளையம் அருகே வைகை ஆற்றில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர் கொலை

மதுரை ஆரப்பாளையம் பஸ்நிலையம் அருகே உள்ள வைகை ஆற்று பகுதியில் வாலிபர் ஒருவர் தலை, முகம், கழுத்து பகுதியில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின்பேரில் கரிமேடு போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில் இறந்தவர் யார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவருக்கு 28 முதல் 30 வயது வரை இருக்கும். பின்தலையில் காயமும், முகம், கழுத்தில் சிறிய அளவிற்கு காயமும் இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்த வாலிபரின் உடல் அருகே மது பாட்டில்கள் கிடந்தன. இதனால் இரவு நேரத்தில் மது அருந்த வந்த போது அங்கு வேறு சிலருடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.

இது தவிர அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் கொலை செய்யப்பட்டவர் யார்? கொலைக்கான காரணம் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story