இஸ்லாமியர் மக்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


இஸ்லாமியர் மக்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

நாகூரில் இஸ்லாமியர் மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

என்.ஐ.ஏ அதிகாரிகள் பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்ததை கண்டித்து நாகூர் புதிய பஸ் நிலையத்தில் இஸ்லாமியர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்து பள்ளிவாசல் இமாம்களும், இஸ்லாமிய இயக்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், கூடுதல் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ம போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 250 பேரை கைது செய்தனர்.


Next Story