ஓசூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற மக்களுக்கு குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்


ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் குளிர்பானங்களை வழங்கினர்.

கிருஷ்ணகிரி,

விநாயகர் சதுர்த்தியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழிபாட்டிற்கு வைக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இந்த சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காக முக்கிய வீதிகளின் வழியே விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் குளிர்பானங்களை வழங்கினர். ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும் குளிர்பானங்கள் வழங்கினர். மேலும் ஊர்வலம் நடைபெற்ற இடங்களில் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் சார்பில் அன்னதானமும் நடைபெற்றது.


Next Story