மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முத்தரசன் வீடு திரும்பினார்


மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முத்தரசன் வீடு திரும்பினார்
x

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முத்தரசன் வீடு திரும்பினார்.

திருச்சி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மாதர் சங்க மாநாட்டு ஏற்பாடுகளை கவனித்து கொள்ள கடந்த 3-ந்தேதி திருச்சிக்கு வந்திருந்தார். கடந்த 4-ந்தேதி மாலை அவருக்கு காய்ச்சல் அதிகமாகி, தொடர் விக்கல் ஏற்பட்டு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அன்று இரவு திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு சுவாச பாதையில் தொற்று இருந்தது. இதனால் கடந்த 2 வாரமாக சிகிச்சையில் இருந்த முத்தரசன் பூரண குணமடைந்ததை தொடர்ந்து அவர் நேற்று காலை வீடு திரும்பினார்.


Next Story