தேசிய விருது வென்றுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்! - ஓ.பன்னீர்செல்வம்


தேசிய விருது வென்றுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்! - ஓ.பன்னீர்செல்வம்
x

தேசிய விருது பெற்றுள்ள கலைஞர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது "சூரரைப் போற்று" திரைப்படத்திற்கும் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது "சிவரஞ்சனியும் சில பெண்களும்" திரைப்படத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களிலும் பணியாற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

இதேபோல், சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்ற அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்ற ஜி.வி.பிரகாசுக்கும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதினைப் பெற்ற ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கரா ஆகியோருக்கும், சிறந்த உறுதுணை நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்ற லக்ஷ்மி பிரியா சந்திரமவுலிக்கும், சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதினைப் பெற்ற ஶ்ரீகர்பிரசாத்துக்கும், மண்டேலா படத்திற்காக சிறந்த திரைக்கதை வசன எழுத்தாளர் மற்றும் சிறந்த அறிமுக இயக்குனர் ஆகியவற்றிற்கான தேசிய விருதுகளைப் பெற்ற மடோனா அஸ்வினுக்கும் என்னுடைய பாராட்டுகள். அனைவரும் மேலும் பல உயரிய விருதுகளை பெற எனது நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story