சத்குரு ஜக்கி வாசுதேவ் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள் - அண்ணாமலை


சத்குரு ஜக்கி வாசுதேவ் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள் - அண்ணாமலை
x

மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.

சென்னை,

கோவை ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் அவருக்கு, மூளையில் ரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனையடுத்து சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார். இருப்பினும் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவர் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார்.

இந்த நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எதிர்பாராத உடல்நல பாதிப்பில் இருந்து சத்குரு ஜக்கி வாசுதேவ் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். எப்பொழுதும் மனிதகுலத்திற்கான அவரது இடைவிடாத சேவையைத் தொடர அவர் விரைவாக மீண்டுவர வேண்டும் என்று அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவருடனும் எனது பிரார்த்தனைகள்" என்று தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story