படகில் இருந்து தவறி விழுந்து மாயமான நாகை மீனவர் சடலமாக மீட்பு.!
மூன்று நாட்கள் தேடுதலுக்கு பின் இன்று மாலை கோவளம் அருகே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது
காரைக்கால்,
காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நாகையை சேர்ந்த தங்கசாமி என்ற மீனவர் மீன் பிடிக்க சென்றார். அப்போது அவர் திடீரென படகில் இருந்து தவறி விழுந்து மாயமானார்.
இதனை தொடர்ந்து சக மீனவர்கள், கடலில் மாயமான தங்கசாமியை தேடி வந்தனர். மூன்று நாட்கள் தேடுதலுக்கு பின் இன்று மாலை கோவளம் அருகே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆழ்கடலில் மிதந்த தங்கசாமியின் சடலத்தை தேடுதல் பணியில் ஈடுபட்ட காரைக்கால் மீனவர்கள் கண்டுபிடித்தனர்
அவரதுஉடலை கைப்பற்றி கோவளம் கடற்கரைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story