நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை சுற்றுப்பயணம்


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு கலந்தாய்வு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் மாரியப்பன வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கலந்தாய்வு கூட்டம், பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். காலை 10 மணியளவில் கள்ளக்குறிச்சியில் உள்ள வி.ஏ.எஸ். திருமண மண்டபத்தில் மாவட்ட கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் கலந்தாய்வு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ஆலோசனை கூறுகிறார். பின்னர் 2 இடங்களில் கட்சி கொடியேற்றுகிறார். இதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் ரிஷிவந்தியத்தில் உள்ள தேரடி திடலில் யாதும் ஊரே என்ற தலைப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story