நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2023 5:30 AM IST (Updated: 1 Oct 2023 5:30 AM IST)
t-max-icont-min-icon

காவிரியில் தண்ணீர் திறக்க மறுத்த கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரிநீரை கர்நாடக அரசு திறந்து விட மறுத்து வருகிறது. இதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில உழவர் பாசறை தலைவர் செங்கண்ணன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் சைமன் ஜஸ்டின், மாநில வக்கீல் பாசறை பொருளாளர் கணேசன், கொள்கை பரப்பு செயலாளர் சிவசங்கரன், மகளிர் பாசறை செயலாளர் வசந்தாதேவி, மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். மேலும் தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரிநீரை கர்நாடகா அரசு திறந்து விடவேண்டும். இதற்கு மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர்.


Next Story