நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது நாம் தமிழர் கட்சி


நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது நாம் தமிழர் கட்சி
x

நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பாளையங்கோட்டையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலை ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


Next Story