நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

காவிரி நதிநீர் உரிமையை மீட்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை

காவிரி நதிநீர் உரிமையை மீட்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். மாநில நிா்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் காவிரி நதிநீர் உரிமையை மீட்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story