நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 540 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில்  முட்டை விலை 5 காசுகள் உயர்வு  540 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:47 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 535 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக அதிகரித்துள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

சென்னை-575, ஐதராபாத்-530, விஜயவாடா-529, மைசூரு-550, மும்பை-590, பெங்களூரு-550, கொல்கத்தா-593, டெல்லி-560.

முட்டைக்கோழி கிலோ ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.107 ஆக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.98-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story