நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது 545 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில்  முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது  545 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:45 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

முட்டைக்கோழி கிலோ ரூ.98-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.107-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story