இறக்கை அழுகல் நோயை கட்டுப்படுத்த கோழித்தீவனத்தை பரிசோதனைக்கு பிறகு பயன்படுத்த வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல்


இறக்கை அழுகல் நோயை கட்டுப்படுத்த  கோழித்தீவனத்தை பரிசோதனைக்கு பிறகு பயன்படுத்த வேண்டும்  ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

கோழிகளில் இறக்கை அழுகல் நோயை கட்டுப்படுத்த கோழித்தீவனத்தில் ஈகோலை, பூஞ்சை நச்சு உள்ளதா? என பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும்

மழைக்கு வாய்ப்பு இல்லை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

அடுத்த 4 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். முதல் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இல்லை. 20-ந் தேதி 3 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 66.2 டிகிரியாகவும் இருக்கும்.

காற்று மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.

இறக்கை அழுகல் நோய்

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட கோழிகள் பெரும்பாலும் இறக்கை அழுகல் மற்றும் பூஞ்சை நச்சினால் பாதிக்கப்பட்டு இறந்து இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோ காக்கஸ், ஈகோலை மற்றும் பூஞ்சை நச்சு ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா? என பரிசோதனை செய்து, அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். மேலும் தீவனத்தில் தகுந்த டாக்சின் பைன்டர், அசிடிபையர்ஸ் மற்றும் புரோபயோடிக்ஸ் உபயோகிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story