நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு515 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு515 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 3 Jun 2023 7:00 PM GMT (Updated: 4 Jun 2023 1:44 AM GMT)
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 510 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனிடையே கறிக்கோழி கிலோ ரூ.129-க்கு விற்பனை செய்யப்பட்டது. முட்டைக்கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story