நம்ம ஊரு சூப்பரு திட்டம் தொடக்கம்
சூளாங்குறிச்சி கிராமத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் தொடக்கம்
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட சூளாங்குறிச்சி கிராமத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் பொது இடங்கள், பள்ளி, ஊராட்சி அலுவலகம், நூலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பொது கழிவறை மற்றும் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதை மாவட்ட திட்ட இயக்குனர் மணி நேரில் பார்வையிட்டு பொது இடங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றவும், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சுத்தம் செய்த தேதியை குறிப்பிடுமாறும், பொது இடங்களில் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். இதில் ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணசாமி, செந்தில்முருகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா, ஊராட்சி மன்ற தலைவர் கோமதிசுரேஷ், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், துப்புரவு பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.