நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் ஆன 32 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த கோவில் மகாகும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி யாகசால பூஜைகள், ஹோமங்கள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.

நேற்று காலை யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசம் எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களும், அதை தொடர்ந்து 32 அடி உயர பக்த ஆஞ்சநேயருக்கும் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் தா.மோ .அன்பரசன் , சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, இந்து அறநிலைய துறை கமிஷனர் குமரகுருபரன், மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ. கே .பி.கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


Next Story