விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி 2-ம் நாள் வைபவம்
விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி 2-ம் நாள் வைபவம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி 2-ம் நாளான நேற்று விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விசாலாட்சி அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மடிசார் புடவை கட்டி விசேஷ அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த விசாலாட்சி அம்மனுக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து அபிராமி அந்தாதி உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். மங்கள இசை ஆராதனையுடன் அம்மனுக்கு சோடச உபச்சாரங்கள் நடைபெற்றன. மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story