வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா - பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கொலு


வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா - பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கொலு
x

வடபழனி முருகன் கோவிலில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

சென்னை,

சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று தொடங்கிய நவராத்திரி திருவிழாவையொட்டி, சக்தி கொலு என்ற பெயரில், வடபழனி கோவிலில் பிரம்மாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மாலையும் 108 பேர் கொண்ட குழுவால், லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

1 More update

Next Story