தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே ஆக்கூரில் வாள்நெடுங்கண்ணி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் நவராத்திரி மூன்றாம் நாள் நிகழ்ச்சியை யொட்டி குங்கும அர்ச்சனை பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குங்கும சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து வாள் நெடுங்கண்ணி அம்மனுக்கு பால், தேன், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக தான்தோன்றீஸ்வரர், வாள் நெடுங்கண்ணி அம்மன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.