சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ


சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ
x

காட்டுத்தீ

ஈரோடு

சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து உள்ளன. செடி, கொடிகள் கருகி காணப்படுகின்றன. மேலும் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.

இந்த நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கம்பத்துராயன்கிரி வனப்பகுதியில் வளர்ந்து உள்ள மூங்கில் மரம் ஒன்றுக்கொன்று உரசிக்கொண்டதில் நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்தது. பின்னர் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனே வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இரவு நேரம் என்பதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கம்பத்துராயன்கிரி வனப்பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் கம்பத்ராயன் மலையில் நேற்று மாைல காட்டுத்தீ மேலும் கொழுந்துவிட்டு எரிந்தது. ஏற்கனவே தீயை அணைப்பதற்காக சென்றிருந்த குழுவினர் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் இரவு வரை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story