வேலூர்: ரூ 1.50 கோடி மோசடி செய்த வாலிபரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைப்பு


வேலூர்: ரூ 1.50 கோடி மோசடி செய்த வாலிபரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைப்பு
x

வேலூர் அருகே ரூ. 1.50 கோடி மோசடி செய்த வாலிபரை இரவு முழுவதும் சரமாரியாக தாக்கி குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

வேலூர்:

வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் புருஷோத்தமன் (வயது 38). இவர் அப்பகுதியில் மாத சீட்டு, பட்டாசு சீட்டு நடத்தி வந்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இவரிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கில் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். சீட்டு எடுத்தவர்கள் பணத்தைக் கேட்ட போது தராமல் கால தாமதம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு புருஷோத்தமன் திடீரென காணாமல் போனார். அவரிடம் சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் வேலூர் எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

நேற்று மாலை புருஷோத்தமன் திடீரென சைதாப்பேட்டை பகுதிக்கு வந்துள்ளார். அப்போது புருஷோத்தமனிடம் சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் அவரை பிடித்து இரவு முழுவதும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவரது முகம் வீங்கி உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

பின்னர் இன்று காலை புருஷோத்தமனை அழைத்து வந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். புருஷோத்தமன் முகத்தில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக போலீசார் அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.


Next Story