தமிழ்நாட்டு கல்வி முறையில் மாற்றம் வேண்டும் - துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழ்நாட்டு கல்வி முறையில் மாற்றம் வேண்டும் - துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x

புதிய தேசிய கல்விக்கொள்கை இளைஞர்களின் திறனை அதிகரிக்கும் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி,

புதிய தேசிய கல்விக்கொள்கை இளைஞர்களின் திறனை அதிகரிக்கும் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி வருவதாகத் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளதாகவும், இதனால் புத்தாக்க நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள பிற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவுக்கு முன்னேறியுள்ளதால், தமிழ்நாட்டு கல்வி முறையை காலத்திற்கேற்ப மாற்றி, இளைஞர்களின் திறன் மேம்பாடு அடைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார். பள்ளி பாட அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

சிறந்த கல்வி மற்றும் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க துணைவேந்தர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.

Next Story