நீட் விலக்கு: ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பார் - நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்


நீட் விலக்கு: ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பார் - நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

நீட் விலக்கு தொடர்பாக ஜனாதிபதியும் உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளிப்பார்கள் என்று நம்புவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

நீட் விலக்கு தொடர்பாக ஜனாதிபதியும் உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளிப்பார்கள் என்று நம்புவதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரை திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்வி தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.


Next Story