நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!


நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!
x

நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்யாமல், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வுகாண வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்யாமல், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மருத்துவப் படிப்பிற்கான 'நீட்' நுழைவுத் தேர்வில் தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தால், அரியலூரைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு மநீம ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

அனிதாவில் தொடங்கிய தற்கொலைகள் எவ்வளவு காலத்துக்கு தொடரப் போகின்றன? நீட் தேர்வை முன்வைத்து அரசியல் செய்யாமல், இதற்கு நிரந்தரத் தீர்வுகாண அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் நம் கண்மணிகளின் உயிரை 'நீட்' காவு வாங்குவதை வேடிக்கை பார்க்கலாமா?" என்று தெரிவித்துள்ளது.Next Story