நெல்லை: சாலையில் சென்ற சரக்கு வேன் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு


x

நெல்லை அருகே குளிர்சாதன பெட்டிகள் ஏற்றிச்சென்ற சரக்கு வேன் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை -நாகர்கோவில் 4 வழிச்சாலையில் குளிர்சாதன பெட்டி ஏற்றிய சரக்கு வேன் இன்று பிற்பகல் நேரத்தில் சென்று கொண்டிருந்தது. செங்குளம் பொன்னாக்குடி பகுதியில் அந்த சரக்கு வேன் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென்று தீப்பற்றியது.

இதில் குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் மின் சாதனங்கள், சரக்கு வேன் ஆகியவை மளமளவென்று தீ பற்றி எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story