நெல்லை- மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையேயும் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
நெல்லை,
நெல்லை- மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. இந்த சிறப்பு ரெயிலானது, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
மேலும், எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையேயும் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்புரெயில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story