நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் விமரிசையாக தொடங்கியது..!


நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் விமரிசையாக தொடங்கியது..!
x

நெல்லையில், நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

நெல்லை,

தமிழகத்தில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆனித் தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

கோவிலில் இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர், நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்து வலம் வருகிறது.

முன்னதாக சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தேரோட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துவருகின்றனர்.

தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story