ரூ.671 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


ரூ.671 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

75 முடிவுற்ற திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பேரூராட்சிகள் ஆணையரகம், நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் ரூ. 671.80 கோடி மதிப்பீட்டிலான 75 முடிவுற்ற திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 4 நகராட்சி அலுவலகக் கட்டடங்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.


Next Story