ஏர்வைக்காடு-திருவாரூர் வழித்தடத்தில் புதிய பஸ் சேவை
ஏர்வைக்காடு-திருவாரூர் வழித்தடத்தில் புதிய பஸ் சேவையை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஏர்வைக்காடு-திருவாரூர் வழித்தடத்தில் புதிய பஸ் சேவையை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பஸ் சேவை தொடக்கம்
நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா ஏர்வைகாட்டில் இருந்து திருவாரூருக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இந்த வழித்தடத்தில் பஸ் இயக்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று முதல் ஏர்வைக்காடு-திருவாரூர் வழித்தடத்தில் புதிய பஸ் சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி புதிய பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நன்றி தெரிவித்தனர்
ஏர்வைக்காடு பஸ் நிலையில் இருந்து காலை 6.45 மணிக்கும், திருவாரூர் பஸ் நிலையில் இருந்து மாலை 5 மணிக்கும் இயங்கும் வகையில் இந்த பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஏர்வைக்காடு-திருவாரூர் வழித்தடத்தில் புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்த அதிகாரிகளுக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கும்பகோணம் போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் (வணிகம்) சிதம்பரக்குமார், கிளை மேலாளர் (திருவாரூர்) அசோகன், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வம் உள்பட படர் கலந்து கொண்டனர்.