வீடுகளில் கழிவுநீர் அகற்றும் லாரிக்கு புதிய கட்டணம் - சென்னை குடிநீர் கழிவுநீர் வாரியம் அறிவிப்பு


வீடுகளில் கழிவுநீர் அகற்றும் லாரிக்கு புதிய கட்டணம் - சென்னை குடிநீர் கழிவுநீர் வாரியம் அறிவிப்பு
x

கழிவுநீர் அகற்றும் லாரிக்கு புதிய கட்டணத்தை அமல்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் வீடுகளில் இருந்து கழிவுநீர் அகற்றும் லாரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், கழிவுநீர் அகற்றும் லாரிக்கு புதிய கட்டணத்தை அமல்படுத்தி சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி குறைந்தபட்சம் 650 ரூபாயும், அதிகபட்சமாக ஆயிரத்து 500 ரூபாயும் குடிநீர் கழிவுநீர் வாரியம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. கழிவுநீர் அகற்றும் லாரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த நிலையில், கழிவுநீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டால் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு லாரிகள் அனுப்பப்படும் என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story