காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி பொறுப்பேற்பு


காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி பொறுப்பேற்பு
x

காஞ்சி சரக டிஐஜியாக பொன்னி ஐ.பி.எஸ் பதவி ஏற்றுக் கொண்டார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டுகள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.

காஞ்சிபுரம்

காவல்துறையின் உயர் அதிகாரிகள் 27 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக முதன்மை செயலாளர் அமுதா அறிவிப்பு வெளியிட்டார். இதில் காஞ்சீபுரம் மாவட்ட டி.ஐ.ஜியாக பணி புரிந்து வந்த பகலவன் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு மதுரையில் டி.ஐ.ஜி.யாக பணி புரிந்து வந்த பொன்னி. இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று காஞ்சீபுரத்தில் உள்ள அலுவலகத்தில் பதவி ஏற்க வந்த அவரை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரிநீத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பின்னர் போலீசாரின் மரியாதையை ஏற்றுக்கொண்டு காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்று கொண்டார்.


Next Story