சென்னை கடைகளில் குட்கா விற்பனையை தடுக்க புதிய சட்டம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


சென்னை கடைகளில் குட்கா விற்பனையை தடுக்க புதிய சட்டம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

சென்னை கடைகளில் குட்கா விற்பனையை தடுக்க புதிய சட்டம் வரவிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு குட்கா விற்பனை தடை செய்யப்பட்டது. பின்னர் ஆண்டுதோறும் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தடையை மீறி விற்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் சென்னையில் கடைகளில் குட்கா மற்றும் புகையிலை விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக புதிய சட்டம் விரைவில் வரவிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இது தொடர்பாக கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

இதுவரை உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.

எனவே கடை வியாபாரிகள் இந்த பொருட்கள் விற்பனையை தவிர்க்க வேண்டும். குட்கா விற்பனையை தடுக்க தேவைப்பட்டால் கூடுதல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றார்.


Next Story