புதிதாக உருவாக வாய்ப்புள்ள புயலுக்கு 'மிக்ஜாம்' என பெயரிடப்படும்: வானிலை ஆய்வு மையம்


புதிதாக உருவாக வாய்ப்புள்ள புயலுக்கு மிக்ஜாம் என  பெயரிடப்படும்: வானிலை ஆய்வு மையம்
x

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு அந்தமான் கடல் மற்றும் மலாக்கா பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இது புயலாக வலுப்பெறும் போது அதற்கு மியான்மர் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட 'மிக்ஜாம்' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 1-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். புயலாக வலுப்பெற்றதும் அதற்கு மியான்மர் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட 'மிக்ஜாம்' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.


Next Story