அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
தியாகதுருகத்தில் அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
தியாகதுருகம்;
தியாகதுருகத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகர செயலாளர் ஷியாம் சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, நகர அவைத்தலைவர் அய்யம்பெருமாள், முன்னாள் நகர செயலாளர் சுப்பிரமணியன், நகர துணை செயலாளர் கிருஷ்ணராஜ், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி வேலுமணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு 15-வார்டுகளிலும் உறுப்பினர் சேர்க்கையை பார்வையிட்டார். அப்போது அதிகப்படியான இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூறினார். இதில் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதாசிவம், நகர இணை செயலாளர் கங்கா ஜெயபிரகாஷ், பொருளாளர் பாண்டுரங்கன், மாவட்ட பிரதிநிதி ரமேஷ், மகளிர் தலைவி மாதேஸ்வரி, நிர்வாகிகள் பாலமுரளிகிருஷ்ணன், ஏழுமலை, ரங்கசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.