ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை "மக்கள் வரவேற்றால் தமிழகம் முழுவதும்" - அமைச்சர் சக்கரபாணி தகவல்


ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை மக்கள் வரவேற்றால் தமிழகம் முழுவதும் - அமைச்சர் சக்கரபாணி தகவல்
x

ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னை,

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான மின்னணு பதிவேடு இயந்திரத்தில் அவ்வப்போது கோளாறுகள் ஏற்படுவதால், மின்னணு பதிவேட்டுக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, ரேஷன் கடைகளில் கண் கருவிழி மூலம் ரேசன் பொருட்கள் வினியோகிக்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் நியாய விலை கடைகளில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ரேசன் கடைகளில் கைரகை சரிபார்ப்பு மூலம் ஏற்கனவே பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சக்கரபாணி கூறுகையில்,

கூட்டுறவு, உணவு பாதுகாப்புத்துறை கீழ் இயங்கும் நியாயவிலை கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் அட்டைதாரரை அடையாளம் காணும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை, அரியலூரில் சோதனை அடிப்படையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும் திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றால் இத்திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும். குடும்ப அட்டைகள் வழங்குவதில் தேக்கமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story