சாமானிய மக்கள் நல கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சாமானிய மக்கள் நல கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 May 2022 6:26 PM GMT (Updated: 20 May 2022 6:28 PM GMT)

சாமானிய மக்கள் நல கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

தரகம்பட்டி,

தரகம்பட்டி அருகே உள்ள வரவணை கிராமத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாமானிய மக்கள் நல கட்சியினர் மற்றும் வரவணை கிராம மக்கள் சார்பில் தரகம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சாமானிய மக்கள் நல கட்சி பொதுச்செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story