சென்னையில் என்.ஐ.ஏ. சோதனை: வங்காளதேச நாட்டினர் கைது


சென்னையில் என்.ஐ.ஏ. சோதனை: வங்காளதேச நாட்டினர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2023 9:59 AM IST (Updated: 8 Nov 2023 10:00 AM IST)
t-max-icont-min-icon

சோதனைக்கு பின்னரே முழுமையான தகவல் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னையின் புறநகர் பகுதிகளான பெரும்பாக்கம், படப்பை, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

மக்களோடு மக்களாக வசித்து வரும் நபர்கள், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நிலையில் மாநில போலீசார் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்கு பின்னரே முழுமையான தகவல் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஏன்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வரும் நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படப்பையில் நடைபெற்ற சோதனையில் வங்காள தேசத்தை சேர்ந்த சபாபுதீன் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்று போலியாக ஆதார் அட்டை தயாரித்து பணி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைபோல மறைமலைநகர் பகுதியில் ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னா, மற்றும் அவருடன் தங்கி இருந்த மியான் ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

1 More update

Next Story