மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்? பதற்றத்தில் கேரளா!
மூணாறு அருகே உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கி உள்ளதால், மீண்டும் நிபா வைரஸ் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
கோழிக்கோடு,
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 4 பேருக்கு நிபா வைரஸ் தாக்கிய நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவதாகவும், வயநாட்டில் உள்ள வவ்வால்களை சோதனை செய்ததில், அவற்றுக்கு நிபா தொற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
வவ்வால்கள் சாப்பிட்ட பழத்தை யாரும் சாப்பிட வேண்டாம் என மாநில சுகாதாரத்துறை மந்திரியும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மூணாறு எம்.சி.காலனியில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கி உள்ளதால், மீண்டும் நிபா வைரஸ் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
சுகாதாரத்துறையும், வனத்துறையும் சேர்ந்து உடனடியாக வவ்வால்களை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story