2030-ல் இளையோர் ஒலிம்பிக் நடத்த முன்னெடுப்பு - அனுராக் தாகூர்


2030-ல் இளையோர் ஒலிம்பிக் நடத்த முன்னெடுப்பு - அனுராக் தாகூர்
x
தினத்தந்தி 19 Jan 2024 1:21 PM GMT (Updated: 19 Jan 2024 1:29 PM GMT)

கேலோ இந்தியாவில் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டில் அதிக பதக்கங்களை இந்தியா வென்றது.

சென்னை,

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்க விழா சென்னையில் தொடங்கியது. பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய மந்திரி அனுராக் தாகூர் விழாவில் பங்கேற்றுள்ளனர். விழா தொடங்கியதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வணக்கம் சென்னை என தமிழில் பேசி உரையை மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர் தொடங்கினார். விழாவில் அவர் பேசியதாவது-

விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா ஆகிய செஸ் ஜாம்பவான்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர். விளையாட்டு துறைகளில் இருந்த ஊழல்களை இல்லாமல் மாற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

இந்தியாவில் செஸ் போட்டி என்றால் விஸ்வநாதன் ஆனந்த் என்று இருந்த நிலையை பல வெற்றிகளுக்கு பின் பிரக்ஞானந்தா மாற்றி உள்ளார். 2030-ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடந்த பிரதமர் மோடி முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார்.

கேலோ இந்தியாவில் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டில் அதிக பதக்கங்களை இந்தியா வென்றது. செஸ் போட்டிகளில் பிரக்ஞானந்தா சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். தூர்தர்ஷன் பிராந்திய ஒளிபரப்பில் டிடிபொதிகை தமிழ்தான் முதல் எச்டி தொலைக்காட்சி என்றார்.


Next Story