நவீன எந்திரங்கள் அணிவகுப்புடன் நிட்ஷோ கண்காட்சி


நவீன எந்திரங்கள் அணிவகுப்புடன் நிட்ஷோ கண்காட்சி
x

திருப்பூரில் 450 அரங்குகளில் நவீன எந்திரங்கள் அணிவகுப்புடன் நிட்ஷோ கண்காட்சி வருகிற 11-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. கண்காட்சியில் இடம்பெறும் எந்திரங்களை நிறுவும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர்

திருப்பூரில் 450 அரங்குகளில் நவீன எந்திரங்கள் அணிவகுப்புடன் நிட்ஷோ கண்காட்சி வருகிற 11-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. கண்காட்சியில் இடம்பெறும் எந்திரங்களை நிறுவும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நிட்ஷோ கண்காட்சி

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையில் நவீன எந்திரங்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. உற்பத்தியாளர்களின் புதிய தொழில்நுட்ப தேடுதல்களை நிறைவு செய்யும் வகையில் நிட்ஷோ கண்காட்சி நடந்து வருகிறது. அதன்படி 21-வது நிட்ஷோ கண்காட்சி திருப்பூர் -காங்கயம் ரோட்டில் டாப்லைட் மைதானத்தில் வருகிற 11-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடக்கிறது.

இதற்காக 1½ லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு 450-க்கும் மேற்பட்ட அரங்குகள் நிறுவும் பணிகள் நடந்து வருகிறது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, தைவான் நாடுகளை சேர்ந்த அதிநவீன நிட்டிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, தையல், பேக்கிங் உள்ளிட்ட பின்னலாடை துறை சார்ந்த அனைத்து வகை எந்திரங்களும் கொண்டு வரப்பட்டு நிறுவும் பணிகள் நடக்கிறது. மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு கைகொடுக்கும் வகையில் நவீன டிஜிட்டல் பிரிண்டிங் எந்திரங்கள் இடம்பெற உள்ளன.

நவீன எந்திரங்கள் அணிவகுப்பு

கண்காட்சி வருகிற 11-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. விழாவுக்கு சைமா சங்க தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்குகிறார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கண்காட்சியை திறந்து வைக்கிறார். சிறப்பு விருந்தினராக பியோ தலைவர் சக்திவேல் பங்கேற்கிறார். இதில் நிட்மா சங்க தலைவர் அகில் ரத்தினசாமி, டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், டீமா தலைவர் முத்துரத்தினம், சாய ஆலை சங்க தலைவர் காந்திராஜன், டிப் தலைவர் அகில் மணி, சிம்கா தலைவர் விவேகானந்தன், கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், பிரிண்டிங் டைஸ் அன்ட் கெமிக்கல் சங்க தலைவர் சரவணன், செயலாளர் கணேசன், டைஸ் அண்ட் கெமிக்கல் சங்க தலைவர் நாகேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதுகுறித்து நிட்ஷோ கண்காட்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறும்போது, 'சர்வதேச அளவில் இட்மா ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சி இத்தாலியில் நடைபெற்றது. அந்த கண்காட்சியில் இடம்பெற்ற நவீன எந்திரங்கள், நிட்ஷோ கண்காட்சியில் இடம்பெறுகிறது. பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான அனைத்தும் இந்த கண்காட்சியில் இடம்பெறும். போர்ச்சுக்கல் நிறுவன தயாரிப்பான ஆடைகளை பேக்கிங் செய்யும் நவீன எந்திரம் முதல்முறையாக இந்த கண்காட்சியில் நிறுவப்பட்டுள்ளது. இதுபோல் நவீன தொழில்நுட்ப எந்திரங்கள் அணிவகுக்க உள்ளன' என்றார்.


Related Tags :
Next Story