அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி


அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
x

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்று கருத்தும் இல்லை. கடந்த 18-ம் தேதி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தற்போது வேறு எதுவும் கூற இயலாது.

சோதனை பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள். நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில், அதிமுகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும். 1972 முதல் அதிமுக பல சோதனைகளை தாண்டி வந்த இயக்கம்.

தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காவே மத்திய அமைச்சரை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர். மத்திய அமைச்சரிடம் கட்சி சார்ந்து எதுவும் பேசவில்லை. பல நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் அதிமுகவை இருமுறை ஜெயலலிதா வெற்றிப்பெற வைத்தார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story