'தமிழகத்தில் பெரியார் சிலையை யாராலும் அகற்ற முடியாது' - அமைச்சர் முத்துசாமி


தமிழகத்தில் பெரியார் சிலையை யாராலும் அகற்ற முடியாது - அமைச்சர் முத்துசாமி
x

பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கே வாய்ப்பில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கூறுவது மிகவும் தவறான கருத்து என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"தமிழகத்தில் பெரியார் சிலையை யாராலும் அகற்ற முடியாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கூறுவது மிகவும் தவறான கருத்து. பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கே வாய்ப்பில்லை. அதை அவர்கள் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது. ஒருவேளை பெரியார் சிலை அகற்றப்பட்டால் யாரும் அதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். நீதிமன்றமும் அதை அனுமதிக்காது."

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.



1 More update

Next Story