சென்னையில் ஒலி மாசு 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்


சென்னையில் ஒலி மாசு 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்
x

சென்னையில் ஒலி மாசுபாடு இயல்பை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ஒலி மாசுபாடு எதிர்ப்பு பேரணியை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 572 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், அதில் 281 வழக்குகளில் இருசக்கர வாகனங்களில் அதிக சத்தத்துடன் வைக்கப்பட்டிருந்த ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை மாநகர போலீசார் உதவியுடன் தனியார் தொண்டு நிறுவனம் சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ஒலி மாசுபாடு அளவு இயல்பை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

நகரங்களில் ஒலியின் அளவானது பகலில் 65 டெசிபலும், இரவில் 50 டெசிபலும் இருக்க வேண்டும் என்பது தான் சுற்றுச்சூழல் துறையின் விதியாகும். ஆனால் தற்போதைய கணக்கெடுப்பின்படி சென்னை மாநகரில் 85 டெசிபல் ஒலி அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story